புதுகை மாவட்டம், பொன்னமராவதியிலிருந்து ஆறு கிமீ தொலைவில் காஞ்சாத்து மலை.

Unknown
0












காஞ்சாத்து மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன. தற்போது கயவர்களால் வேட்டையாடியது போக எஞ்சிய காட்டு மாடுகள் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்றன. நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு இருக்கிறதாம்.

புதுகை மாவட்டம், பொன்னமராவதியிலிருந்து ஆறு கிமீ தொலைவில் பூலாங்குறிச்சி அருகே உள்ள காஞ்சாத்துமலை முருகன் கோயில் மற்றும் சுற்றுப்பகுதியில் காணப்படும் சமணர் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். புதுகை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது காஞ்சாத்துமலை. இக்கோயிலில் கார்த்திகை,அமாவாசை உள்ளிட்ட ஒரு சில முக்கிய விசேஷ நாள்களில் மட்டுமே பூஜை நடைபெறும். இம்மலையில் காணப்படும் இரண்டு சுனைகளும் வெயில்,மழைநீர் நேரடியாக விழாதவாறு இச்சுனைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுனையின் வலது புறம் 2000 ஆண்டுகள் பழமையான விநாயகர் சன்னதியும், அதன் மேல்புறம் பைரவர், அம்மன், சிவன் ஆகிய சன்னதிகள் காணப்படுகிறது.

அம்பாள் சன்னதி எதிர்புறம் முனி சிலை உள்ளது. சுணையின் வலது புறம் செங்குத்தான படிக்கட்டுகள் வழியே சென்றால் முருகன் கோயில் காணப்படுகிறது. மேலும், இம்மலையின் சுற்றுப்பகுதியில் குன்றுகள் பல காணப்படுகிறது. இதில், சிவகங்கை மாவட்ட எல்லையில் காணப்படும் ஒரு குன்றில் சமணர் கால புராதான சின்னங்கள் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 படிகள் கடந்து மேலே சென்றால் குகை குன்று காணப்படுகிறது. இக்குன்றில் அனைத்து சமண சின்னங்களிலும் காணப்படுவது போன்று காடி அமைக்கப்பட்டுள்ளது. காடி என்பது மலைகளில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும், மழைநீர் உள்ளே வராமல் இருப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதாகும். மேலும் குன்றின் மேல் பகுதியில் சமண தீர்த்தங்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்கர் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் நிலையில் அமையப் பெற்றுள்ளது. தீர்த்தங்கர் மேல் மூன்று அடுக்கு குடையும், கீழ் பகுதியில் தாமரை இதழ்கள் விரிந்த நிலையிலும் காணப்படுகிறது. மேலும் தீர்த்தங்கரின் இரு புறத்திலும் நடன மங்கையர்கள் காணப்படுகின்றனர். இக்குன்றுப்பகுதியில் மேலும் பல சமணர் கால புராதன சின்னங்கள் காணப்படலாம் எனக் கூறப்படுகிறது. இச்சின்னங்கள் சுமார் 3000 முதல் 5000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை. ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் .... பின் குறிப்பு ... அங்கு நம்மை வழிநடத்த யாரும் இருக்க மாட்டார்கள். பாதுகாப்பு நம்மைச் சார்ந்தது.....

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top