தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்.

Unknown
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் மட்டும் புதன்கிழமை (அக். 11) சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது. தஞ்சாவூர் ஒன்றியத்தில் சூரக்கோட்டை, மாரியம்மன் கோயில், பூதலூர் ஒன்றியத்தில் இந்தலூர், மனையேறிப்பட்டி, திருவையாறு ஒன்றியத்தில் சாத்தனூர், செம்மங்குடி, ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஆதனக்கோட்டை, திருவோணம் ஒன்றியத்தில் காரியாவிடுதி, அக்கரைவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ளூர், கொத்தங்குடி, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கீரனூர், சாத்தனூர், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கீழ்மாத்தூர், பாபநாசம் ஒன்றியத்தில் சரபோஜிராஜபுரம், துரும்பூர், அம்மாபேட்டை ஒன்றியத்தில் வையச்சேரி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் செம்பாளூர், வீரக்குறிச்சி, மதுக்கூர் ஒன்றியத்தில் வாட்டாக்குடி உக்கடை, வாட்டாக்குடி வடக்கு, பேராவூரணி ஒன்றியத்தில் துறவிக்காடு, மடத்திக்காடு ஆகிய ஊராட்சிகளில் அக். 11-ம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகத் தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதில், பொதுமக்கள், சுயஉதவிக் குழுவினர் பெருமளவில் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top