நோக்கியா 2 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்.

Unknown
0


இந்தியாவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் அறிமுகமான நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா 3 மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இரண்டு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி LTPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
- அட்ரினோ 304 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4100 எம்ஏஎச் பேட்டரி

புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நவம்பர் 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 2 விலை ரூ.6,999 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top