
பேராவூரணி வட்டார எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் டிசம்பர் 28.
December 23, 2017
0
பேராவூரணி வட்டார எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் டிசம்பர் 28 வியாழன் அன்று காலை 10 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியர்அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சக்திவேல் தலைமையில் நடைபெற உள்ளது.இதில் பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், வட்டவழங்கல் அலுவலர் சாந்தகுமார் மற்றும் எரிவாயு நிறுவனஅதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பேராவூரணி வட்டார எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவித்து தீர்வு காணலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Share to other apps