பேராவூரணியில் தென்னை சார்ந்த தொழிலின் ஆலோசனை கூட்டம் 12-02-2018.

Unknown
0


பேராவூரணி சுற்றுவட்டார  பகுதியில் தேங்காய் உற்பத்தி, கொப்பரை தயாரித்தல், கயறு தயாரித்தல், தென்னை மட்டை கழிவு பஞ்சிலிருந்து கேக் தயாரித்து ஏற்றுமதி செய்தல் என பல்வேறு துணைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே தென்னை நார், தென்னை உற்பத்தி பொருட்கள் தயாரிப்போர், தென்னை மட்டையை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் என அனைத்து  தரப்பினரும், தொழிலில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி தொழில் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்து, தேக்க நிலை ஏற்படாமல் இருக்க, தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதன் அவசர ஆலோசனை கூட்டம் எதிர்வரும் 12-02-2018 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில், தனம் திருமண மகாலில் நடைபெறவுள்ளது. இத்தொழில் சார்ந்த பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, அதிராம்பட்டினம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top