எள் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை/

Unknown
0
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆேலாசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மாசிபட்ட எள் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இப்பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகளை பொருத்தவரை மிக முக்கியமானது தண்டு பினைப்பான் மற்றும் காய்பினைப்பான். இவை தண்டு பகுதியை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும், வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இவைகளை கட்டுப்படுத்த விதைத்த 25, 35 மற்றும் 50வது நாட்களுக்கு பிறகு பாசோலோன் 400 மில்லி அல்லது மானோகுரோட்டபாஸ் 400 மில்லி அல்லது கார்பரில் 50 சத தூள் 400 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைதெளிப்பானால் தெளிக்க வேண்டும். அல்லது 2 சதவீதம் வேப்பெண்ணெய் கரைசலை 2 முறை தெளிக்க வேண்டும். மற்றொரு சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடி புழுவும் ஒன்று. இப்புழு 60 மி.மீ நீளமாகவும், கருமை கலந்த பழுப்பு உடலில் செம்புள்ளிகளுடனும் கருப்பு தலையுடன் காவ போன்று வளைந்து செல்லும். இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும்.
இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 750 மில்லி மாலத்தியான் அல்லது 400 மில்லி பெண்தியான் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தவரை வேரழுகல் நோய் மற்றும் பூவிலை நோயாகும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடிங்கி அழித்துவிட வேண்டும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த விதை விதைக்கும்போதே விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடின் என்ற பூசாணகொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். விதைத்து செடி வளர்ந்த பின் இந்நோய் தோன்றினால் 1 சத கார்பன்டாசிம் (1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் மருந்து) மருந்தை வேரின் அடிப்பாகத்தில் வேர் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top