பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சார்பில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் அ.கருணாநிதி தலைமை வகித்து யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.ராமநாதன் வரவேற்றார். டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். உதவி தலைமை ஆசிரியர் சோழபாண்டியன், உடற்கல்வி இயக்குநர் ராஜ்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜேசுராஜா, பாலிடெக்னிக் கல்லூரி திட்ட அலுவலர்கள் முருகேசன், சரவணன், ரோட்டரி அலுவலர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.இதே போல் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், சாரண மாணவர் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜூ ஆகியோர் யோகா குறித்து பேசினர்.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி.
June 23, 2018
0
Tags
Share to other apps