பேராவூரணி திருச்சிற்றம்பலத்தில் நேற்று மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்களது துறைசார்ந்த திட்டங்களைப் பற்றி பொதுமக்களிடையே விளக்கிப் பேசினர். முகாமில் ஏற்கெனவே, பெறப்பட்ட 61 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டன. மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்நீக்கல், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விலையில்லா வீட்டுமனைப்பட்டா உட்பட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கோட் டாட்சியர் மகாலெட்சுமி வழங்கினார்.
திருச்சிற்றம்பலத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
July 26, 2018
0
Tags
Share to other apps