பட்டுக்கோட்டை - பேராவூரணி - காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து.

0

பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி முதல், பட்டுக்கோட்டை - பேராவூரணி- காரைக்குடி இடையே வார இரு முறை மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ஜனவர் முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. வாரந்தோறும் திங்கள், வியாழக்கிழமையில் காரைக்குடியிலிருந்து புறப்படும் இந்த ரயில் (வண்டி எண் 06856) காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு அதிரை நியூஸ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பகல் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும். எதிர் மார்க்கத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் ரயில் (வண்டி எண் 06855) மாலை 4.20 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top