இன்று இரவு அதிக நேரம் பிடிக்கும் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை இயல்பான கண்களால் நாம் காணலாம். இந்த சந்திர கிரகணம் இந்தியா முழுதும் நன்றாகத் தெரியும். இரவு 11.52 மணிக்கு கிரகணம் தொடங்கும். அதிகாலை 12.52 மணிக்கு முழு சந்திர கிரகணம் தெரியும். 2.33 மணி வரை முழு கிரகணம் நீடிக்கும். அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடையும். இதுகுறித்து பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: " பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும். சந்திரன் நிறம் மாறுவது தெளிவாக தெரியும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்க்க வசதியாக பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கி கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. இன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை இந்தியாவிலும், தமிழகத்திலும் பார்க்கலாம். மேலும், ஜூலை 1ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் பார்க்க முடியாது. 30 நாட்களில் 3 கிரகணங்கள் நிகழ்வதால் பூமிக்கு ஆபத்து என்று அறிவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், யாரும் பயப்பட வேண்டாம். பூமிக்கு ஆபத்து ஏற்படாது. இதுபோல, 2009ம் ஆண்டு ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது, பூமிக்கு எவ்வித ஆபத்து ஏற்படவில்லை. 2013ம் ஆண்டும் ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் நிகழ உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இன்று இரவு முழு சந்திர கிரகணம்.
January 20, 2019
0

Share to other apps