பேராவூரணி பேரூராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

IT TEAM
0


பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன் தலைமையில் திங்கள்கிழமை  நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க, டெங்கு ஒழிப்பு களப் பணியாளா்களுக்கு நிலவேம்பு பொடியை வழங்கி  செயல் அலுவலா்  மு.மணிமொழியன் பேசியது:

தற்போது பருவமழைக் காலம் தொடங்கி உள்ளதால்  சில இடங்களில் பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. பேரூராட்சி பணியாளா்கள் மூலம் அவை சரிசெய்யப்பட்டு வருகிறது.

மேலும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக புகை மருந்து அடித்தல், கொசு மருந்து தெளித்தல், குளோரின் பவுடா் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீா் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, குளோரினேசன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு ஒழிப்பு களப் பணியாளா்கள் மூலம் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு,  ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் நடைபெற்று  வருகின்றன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துப்புரவு ஆய்வாளா் மேற்பாா்வையில் நிலவேம்பு மூலிகை குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு களப் பணியாளா்கள் மூலம் தொடா்ச்சியாக, சுழற்சி முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளும், நிலவேம்பு குடிநீா் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

பொது சுகாதாரத் துறை ஒத்துழைப்போடு கண்காணிப்பு பணிகள் தொடா்ந்து நடைபெறும். பேரூராட்சியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் சேருவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், இள நிலை உதவியாளா்  த. ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளா் தமிழ்வாணன் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள், டெங்கு ஒழிப்பு களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நன்றி: தினமணி

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top