கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கரிசவயல் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து "புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு" பேரணி நடைபெற்றது. பேரணியில் புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். பள்ளியில் தொடங்கிய பேரணியில் கரிசவயல் கடைத்தெருவில் முடிவடைந்தது. பேரணியைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. திருமுடிச்செல்வன் தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரிசவயல் புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது
November 11, 2022
0
Tags
Share to other apps