பேராவூரணி 32ம் தேதி கிராமசபை கூட்டம் ஊரக வேலைதிட்ட செயல்பாடுகள் சமூக தணிக்கை.

Unknown
0



பேராவூரணி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஊமத்தநாடு, குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 28 ஊராட்சிகளில் வருகிற 31ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் 2014-15, 2015-16ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமூக தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் பிள்ளையார்பட்டி, நீலகிரி, மேலவெளி ஆகிய ஊராட்சிகளிலும், பூதலூர் ஒன்றியத்தில் பூதலூர், வெண்டையம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், திருவையாறு ஒன்றியத்தில் கீழத்திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் கண்ணந்தங்குடி மேற்கு, கண்ணந்தங்குடி கிழக்கு ஆகிய ஊராட்சிகளிலும், திருவோணம் ஒன்றியத்தில் வெட்டுவாக்கோட்டை, பின்னையூர் ஆகிய ஊராட்சிகளிலும், கும்பகோணம் ஒன்றியத்தில் அண்ணலக்ரகாரம், திருவலஞ்சுழி ஆகிய ஊராட்சிகளிலும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மேலையூர், நாச்சியார்கோயில் ஆகிய ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நரிக்குடி ஊராட்சியிலும், பாபநாசம் ஒன்றியத்தில் திருவைக்காவூர், கபிஸ்தலம் ஆகிய ஊராட்சிகளிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உக்கடை, அருந்தவபுரம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கரம்பயம், தாமரங்கோட்டை தெற்கு, மதுக்கூர் ஒன்றியத்தில் ஆலத்தூர், அத்திவெட்டி, பேராவூரணி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஊமத்தநாடு, குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில், 28 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களும், சுய உதவிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top