பேராவூரணி ரெட்டவயல் சாலையை சரி செய்யகோரிக்கை.

Unknown
0

பேராவூரணி – ரெட்டவயல் மெயின் சாலையின் குறுக்கே ரயில்வே சாலையில் செங்குத்தான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து தருமாறு

பேராவூரணி மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வேத .குஞ்சருளன் மாவட்ட ஆட்சியருக்கு மனுஅனுப்பியுள்ளார்.

அவ் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பேராவூரணி காவல் நிலையம் அருகே ஆதனூர் வழியாக நெல்லடிக்காடு, ரெட்ட வயல் வழியாக ஆவுடையார் கோவில் செல்லும் மெயின் சாலையில் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில்வே சாலை மெயின் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயில்வே துறையினர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை செய்து வரும்போது மெயின் சாலையை விட ரயில்வே சாலை சுமார் 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதனால் ரயில்வே சாலையை கடக்கும் இடம் செங்குத்தான நிலையில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில்  25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த வழியாக தான் பேராவூரணி நகருக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் . மேலும் ஒரு பக்கத்திலிருந்து வாகனம் ஏறும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இல்லை என்றால் பின்னால் வாகனத்தை எடுக்கும் போது பிரேக் பிடிக்க முடியாமல் பின்னால் செல்லும் வாகனங்களில் ஏறி சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாகனத்தில் செல்பவர்களாவது விழுந்து எழும் சூழ்நிலையில் உள்ளனர்.மேலும் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி, மற்றும் நவதானியங்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும்போது செங்குத்தான பாதையில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் விவசாயிகள் சைக்கிள் மூலம் விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல சம்பளத்திற்கு ஆள் கூட்டிச் செல்லும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே தாங்கள் இந்த மனுவை ஏற்று சாலையை அகலப்படுத்தியும், எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு மெயின் சாலையை உயர்த்தியும் தந்து பொது மக்களின் கஷ்டம் போக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top