
இதுகுறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில்," இன்று நடைபெறும் கண்பரிசோதனை முகாமில் கண் நோயாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். கண்புரை நோய் கண்டறியப்படுவோர் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, டாக்டர் ஞானசெல்வம் குழுவினரால் நவீன ஃபேக்கோ முறைப்படி கண் அறுவை சிகிச்சை மூலம் லென்ஸ் பொருத்தப்பட்டு அழைத்து வரப்படுவர். மருந்து, மாத்திரைகள், கண்ணாடி, உணவு, போக்குவரத்து வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
கண் நோயாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார். கண்சிகிச்சை முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன், மருத்துவ அலுவலர் டாக்டர் சிவரஞ்சனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கண் மருத்துவர் திரவியம் செய்து வருகிறார்.