பேராவூரணி அடுத்த கொளக்குடி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியரிடம் மனு.

Unknown
0
 

பேராவூரணி அருகே கொளக்குடி கிராமத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என நான்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த ரெட்டவயல் - பெரும களூர் சாலையில்,கொளக்குடி கிராம த்தில் தங்கவேலு என்பவருக்குச் சொந்தமான ரைஸ்மில் கட்டிடத்தில் 3நம்பர் கடைத்தெரு பகுதியில் மதுக்கடை திறக்க ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்படும் இட த்தின் அருகே குடியிருப்பு பகுதி உள்ளதாலும், பள்ளி, கல்லூரி களுக்குச் செல்லும் மாணவர்க ளுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இடை யூறாக அமையும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அருகில் உள்ள ருத்திரசிந்தாமணி, கொளக்குடி, அமரசிம்மேந்திரபுரம், ரெட்டவயல் ஆகிய நான்கு ஊராட்சிப் பகுதி மக்களுக்கும் மதுக்கடை திறப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொளக்குடி பஞ்சாயத்து 3 நம்பர் கடைத்தெரு பகுதியில் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில், பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே. இரகுராமன், காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், கோட்ட கலால் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ருத்திர சிந்தாமணி தங்க.மனோகரன், அமர சிம்மேந்திரபுரம் கே.கே.ஜி.கணேசன், கொளக்குடி பி.கல்யாண சுந்தரம், ரெட்டவயல் ஏ.கே.கண்ணன், துரை.திலீப்குமார் மற்றும் கிராம முக்கி யஸ்தர்கள் ஆனைகட்டிக்கொல்லை கே.மாரிமுத்து, பி.ரமேஷ், பி.தர்ம ராஜ், வெள்ளாளங்காடு பி.பாலசுப்பிர மணியன், கொளக்குடி கே.கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து, ‘மது க்கடை திறக்கக் கூடாது’ என வலி யுறுத்தி, பொதுமக்கள் சார்பில் கோரி க்கை மனுவினை நேரில் அளித்தனர்.

பின்னர் பொதுமக்கள் சார்பில் பேசிய ருத்திரசிந்தாமணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தங்க.மனோ கரன் கூறுகையில், “ இப்பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை டா ஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையேல் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரி வித்தார்.

நன்றி : தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top