முருங்கையைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை முறைகள்.

Unknown
0


முருங்கையைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை முறைகள்.
இலைப்புள்ளி நோய்கள்பழுப்பு இலைப்புள்ளி நோய்
அறிகுறிகள்
இலைகளில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படும். பின்னாளில் அவை இலை முழுவதும் பரவும். இலைப்புள்ளிகள் இணைந்து எரிந்த பகுதிகள் போல் தோற்றமளிக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்.
நோய்க்காரணி
செர்கோஸ்போரா எனும் பூஞ்சாணத்தால் இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பூஞ்சாணம் பழுப்பு நிற இழைகளால் ஆனவை. இதன்மேல், நீண்ட அல்லது மெலிதாக வளைந்த, எளிய தொடர்ச்சியான மஞ்சள் கலந்த பழுப்பு நிற கொனிடியோபோர்கள் தோன்றி, பலவடிவமுடைய உருளையான, 1-3 தடுப்புகளுடைய மஞ்சள் கலந்த பழுப்பு நிற நுணிநோக்கி குவிந்த கொனிடியா வித்துக்களைத் தோற்றுவிக்கின்றன.
நோய் பரவும் விதம் கொனிடியாக்கள் காற்றினாலும் மழைத்துளிகளாலும் இலைப்பரப்பினை அடைந்து, முளைத்து, நோயைத் தோற்றுவிக்கின்றன. இலைகளின் மேல் புள்ளிகள் தோன்றி, அவற்றில் கொனிடியாக்கள் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் தலை முறைத் தாக்குதல் செய்கின்றன. பூஞ்சாணத்திற்கு சாதகமில்லாத வானிலை நிலவும்போது, கொனிடியாக்கள் இலைக்கழிவுகள் தங்கி அடுத்த வருடத்தில் பயிரைத் தாக்குகின்றன.
நோய் பரவும் சூழல்
காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலையால் நோய் பரவும் தன்மை அதிகரிக்கின்றது. 200 முதல் 300 வரை உள்ள வெப்பநிலையில் பூஞ்சாணம் அதிவிரைவில் ஸ்போர்களைத் தோற்றுவிக்கின்றன.
நோயைக் கட்டுப்படுத்துதல்
கார்பண்டாசிம், டைபோலட்டான், மேன்கோசெப், மானெப், ஜினைப் மற்றும் மெடிரம் ஆகிய பூஞ்சாணக் கொல்லிகள் இந்நோயைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவை.
செப்டோரியா இலைப்புள்ளி நோய்
அறிகுறிகள்
வெண்பழுப்பு நிற மையம் மற்றும் ஆழந்த பழுப்பு நிற ஓரங்களை உடைய வட்டவடிவப் புள்ளிகள், இலைகள், தண்டுப் பகுதிகள் ஆகிய இடங்களில் தோன்றும் புள்ளியின் மையத்தில் நுண்ணிய கருமை நிற ஊசிமுனை போன்ற தோற்றம், மழைக்காலத்தில் நோய் தீவிரமடையும்பொழுது இலையுதிர்தலைத் தோற்றுவிக்கும்.
நோய்க்காரணி
செப்டோரியா லைகோபெர்ஸிசி எனும் பூஞ்சாணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இளம் பூஞ்சாண இலைகள் நிறமற்ற மெல்லிய மிகச்சில தடுப்புக்கள் உடையவை. முதிர்ந்த இலைகள் பழுப்பு நிற, கிளைகளுடன் கூடிய தடுப்புக்கள் உடையவை. கருப்பு நிற புள்ளிகள் உருவாகும் ஆரம்ப நிலையில், பல பூஞ்சாண இலைகள் ஒரு இடத்தில் கூடி பிணைந்து மாய பாரண்கைமா போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
நோய் பரவும் விதம்
பூஞ்சாணம் நோய் தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளில் மைசீலியம் அல்லது ஸ்போர்கள் வடிவத்திலோ அல்லது சொலானேசியே குடும்பத் தாவரங்களின் மீது படிந்தோ குளிர்காலத்தைக் கழிக்கின்றன. கொனிடியாக்கள் மழையால் அடித்து எழச் செய்யப்பட்டு, தாக்குதலை ஏற்படுத்துகின்றன.
நோய் பரவும் சூழல்

முருங்கை மரத்தின் அருகில் வளரும் சொலனேசியா குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள மற்றும் களைச் செடிகள் உட்பட பல பயிர்களை இந்தப் பூஞ்சாணம் தனது வாழ்விடமாகக் கொண்டுள்ளது. வெப்பநிலை 20 முதல் 250 செல்சியஸ் மற்றும் காற்றின் ஈரப்பதம் 75 முதல் 32 சதவீதம் வரை இருக்கும்போது, நோய் அதிவிரைவில் பரவுகிறது.
நோயைக் கட்டுப்படுத்துதல்
பினோமில், கார்பண்டாசிம், மேன்கோசெப், காப்பர் ஆக்ஸி குளோரைடு, போல்பெட் மெடிரம், காப்டாபால் ஆகிய பூஞ்சாணக் கொல்லி மருந்துகள் இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆல்ட்டானேரியா இலைப்புள்ளி நோய்
அறிகுறிகள்
இலைகளில் சுருள்வடிவ ஓரங்களுடைய வட்ட வடிவம் அல்லது கோண வடிவமுள்ள பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படும். இப்புள்ளிகள் ஒன்றிணைந்து எரிந்த பகுதிகளாக மாறி பின்னர் இலைகள் உதிர்வடையும். கிளைகளில் கருமை அல்லது பழுப்பு நிற வடுக்கள் தோன்றும்.
நோய்க்காரணி, ஆல்ட்டர்னேரியா சொலானி பூஞ்சாணம் தடுப்புக்களுடைய இளம்பழுப்பு நிற இலைகளால் ஆனது. இவை முதிர்வடைந்து கருநிறமாக மாறும். புள்ளிகளின் மையத்திலிருந்து ஸ்டோமேட்டா தோன்றி, அவற்றில் கொனிடியாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொனிடியாக்கள் கூர்மையானதாகவும், அடர் நிறமுடையதாகவும் தனியாகவோ அல்லது இருகொனிடியாக்கள் உள்ள சங்கிலிகளாகவோ தோன்றுகின்றன. கொனிடியாக்களில் ஐந்து முதல் பத்து குறுக்கு தடுப்புக்களும் சில நீளவாக்குத் தடுப்புக்களும் உள்ளன.
நோய் பரவும் விதம்
பயிர்க்கழிவுகளில் எஞ்சியிருக்கும் கொனிடியாக்கள் மூலம் முதனிலைத் தாக்குதல் ஏற்படுகிறது. முதனிலைப் புள்ளியிலிருந்து தோன்றும் கொனிடியாக்களால் இரண்டாம் நிலை நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. இந்த கொனிடியாக்கள் காற்று, நீர் மற்றும் பூச்சிகளால் பிற தாவரங்கள் மற்றும் இலைகளுக்குப் பரவுகிறது.
நோய் பரவும் சூழல்
மண்ணில் அதிக ஈரத்தன்மை காற்றில் ஈரப்பதம், பனி மற்றும் மழையினால் இந்நோய் அதிகமாகப் பரவுகிறது. 280 முதல் 300 செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நோய் பரவுவதற்குச் சாதகமானது.
நோயைக் கட்டுப்படுத்துதல்
நோய் அல்லது வேர்ப்புழுக்கள் தாக்காத வயலில் விதைக்க வேண்டும். கார்பண்டாசிம் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பாதிப்படைந்த மரங்களை வயலிலிருந்து அப்புறப்படுத்தி அழிக்க வேணடும். பிற பயிர்களைக் கொண்டு பயிர்ச்சுழற்சி செய்வதன் மூலம் நோய்க்காரணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கார்பண்டாசிம் அல்லது பினோமைல் பூஞ்சாணக் கொல்லியை கரைத்து மண்ணில் ஊற்றுவதன் மூலம் ஃபுளேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
புசேரியம் வாடல் நோய்
அறிகுறிகள்
நோயின் ஆரம்பத்தில் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மஞ்சளாக மாறி, பின் படிப்படியாக இளம் இலைகளும் நிறமிழக்கும் நிலை உருவாகும். இலைகள் சோர்வடைந்து, வாடி, பின்னர் உதிர்கின்றன. இந்நோயால் மரத்தின் சில கிளைகளோ அல்லது முழு மரமோ மீள முடியாதபடி வாடி பின்னர் காய்ந்து விடுகின்றன. இலை நரம்புகள் பழுப்படைந்து விடுகின்றன. மரங்கள் இளமையிலேயே முதிர்வடைவதும், காய்கள் முதிர்வடையும் முன்னரே பழுத்தலும் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
நோய்க்காரணி
இந்நோய் ஃபுசேரியம் ஆக்ஸிஸ்போரம் சிற்றினம் மொரிங்கே எனும் பூஞ்சாணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பூஞ்சாணம் சிறு கொனிடியா, குறு கொனிடியா மற்றும் கிளாமிடாஸ்போர்கள் ஆகியனவற்றை உற்பத்தி செய்கின்றன.
நோய் பரவும் விதம்
இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இது கிளாமிடோஸ்போர்கள் மூலம் மண்ணிலோ அல்லது பாதிக்கப்பட்ட பயிர்க்கழவுகளில் பூஞ்சாணமாகவோ மண்ணில் வாழ்கிறது. காற்று மூலம் பரவும் ஸ்போர்கள், கசிவு நீர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் மூலம் பிற வயல்களில் இந்நோய் பரவுகிறது.
நோயைக் கட்டுப்படுத்துதல்
நோய் அல்லது வேர்ப்புழுக்கள் தாக்காத வயலில் விதைக்க வேண்டும். கார்பண்டாசிம் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பாதிப்படைந்த மரங்களை வயலிலிருந்து அப்புறப்படுத்தி அழிக்க வேணடும். பிற பயிர்களைக் கொண்டு பயிர்ச்சுழற்சி செய்வதன் மூலம் நோய்க்காரணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கார்பண்டாசிம் அல்லது பினோமைல் பூஞ்சாணக் கொல்லியை கரைத்து மண்ணில் ஊற்றுவதன் மூலம் ஃபுளேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top