மூன்றாமிடத்தை தொண்டியை சேர்ந்த கருப்பையா (50), நான்காமிடத்தை வல்லவன்பட்டினம் படகும் பெற்றன. மேலும் கடலில் நீச்சல் போட்டி, வேகமாக சைக்கிள் ஓட்டுதல், பானை உடைத்தல், பெண்களுக்கான இசை நாற்காலி, கயிறு தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. போட்டிகளை சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
