பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பாய்மர படகு போட்டி.
அக்டோபர் 26, 2017
0
எம்ஜிஆர்நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன் பிடி துறைமுகத்தில் பாய்மர படகு போட்டி நேற்று நடந்தது.
தஞ்சையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பல்வேறு போட்டி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சேதுபாவாசத்திரம் மீன்பிடிதுறை முகத்தில் பாய்மர படகு போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் 15 பாய்மர படகுகள் பங்கேற்றது. போட்டியை அமைச்சர் துரைக்கண்ணு, எம்பி வைத்திலிங்கம் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
எம்பிக்கள் பரசுராமன், பாரதிமோகன், கலெக்டர் அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாய்மர படகு போட்டியில் கழுமங்குடா கண்ணன் முதலிடமும், ஏரிப்புறக்கரை குப்புராஜ் இரண்டாமிடமும், சேதுபாவாசத்திரம் மலைராஜா மூன்றாமிடமும், சேதுபாவாசத்திரம் மனோகரன் நான்காமிடமும், கழுமங்குடா கருப்பையா ஐந்தாமிடமும், சேதுபாவாசத்திரம் விஜயன் ஆறாமிடமும் பிடித்தனர். மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க