தஞ்சாவூர், மே.3 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், உள்ள செருவாவிடுதி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் கிராம வேளாண் அனுபவத்திட்டத்தின் ஒரு பகுதியாக செருவாவிடுதி கிராமத்தில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடைபெற்றது.
இதில் வண்ணப்பொடி பயன்படுத்தி சமூக வரைபடம், வளங்கள் தரவரிசை, கல்வி விகிதம், தினசரி செயல் நேரம், பிரச்சனை மரம் போன்றவற்றை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வரைந்து காட்டினர்.
இந்நிகழ்வில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் ஆகியோர் கூட்டாக கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீடு பற்றி விளக்கிக் கூறினர்.