பேராவூரணி ஒன்றியத்தில் சுகாதாரப் பணிகள் ஆக. 29 முதல் செப். 2 வரை

Unknown
0


பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து நாட்கள் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப். 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் செளந்தர்ராஜன் தலைமையில் ஒன்றிய ஆணையர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நீர் மற்றும் கொசுவினால் பரவும் நோய்களை தடுக்க ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள், கொட்டாங்கச்சிகள், பழைய டயர்கள், உடைந்த பானைகள் ஆகியவற்றை கண்டறிந்து அழிப்பது, ஊராட்சிகளில் முழுமையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், டாக்டர்கள் அறிவானந்தம், சந்திரசேகர், அரவிந்த், சிவரஞ்சனி, இலக்கியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top