பேராவூரணியில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள்

Unknown
0
பேராவூரணியில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களும் - விபத்து மரணங்களும்!

கடந்த இரு தினங்களில் சேது சாலை மற்றும் அண்ணா சாலை (ஸ்டேட் பேங்க் எதிரில்) இரண்டு இடங்களில் விபத்து நடந்து அதனால் இருவர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மொய் விருந்து நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நகரில் நெரிசலும் அதிகரித்து வருகிறது. சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலையோரக் கடைகளால் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகள் சிந்தித்து விபத்துக்களை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெய்ச்சுடர் கேட்டுக்கொள்கிறது.

1. ஸ்டேட் பேங்க் அருகில் அளவு கடந்த நெரிசல் ஏற்படுகிறது. வங்கியின் எதிரில் தொன்னூராண்டுகள் பழமையான தொடக்கப்பள்ளி(கிழக்குப்பள்ளி) உள்ளது. அப்பள்ளியிலிருந்து சிறுவர்கள் மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் அவர்களுக்கு இடையூரக உள்ள பாணிபூரி கடை மற்றும் சாலையோர காய்கறிக்கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் அக்கடைகள் அகற்றப்படாமல் உள்ளது.

அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

2. வாகனங்கள் வைத்துச் செல்ல பார்க்கிங் ஏரியாவை உருவாக்க வேண்டும். கண்ட இடங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிடுவதால் நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கு நிகழ்கிறது.

3. விழா அரங்கங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு அவ்வரங்கங்கள் உரிய வாகன நிறுத்தப் பகுதிகளைக் கொண்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையோரக் கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

5. வாகன நெரிசல் ஏற்படும் காலை- மாலை நேரங்களில் போக்குவரத்துக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top