பட்டுக்கோட்டை வட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது..

Unknown
0


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:

பட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன.

நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:

பட்டுக்கோட்டை மேற்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.

பட்டுக்கோட்டை கிழக்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top