பேரவூரணி வீரியங்கோட்டையில் உள்ள அட்லாண்டிக் இண்டர் நேஷனல் பள்ளி..

Unknown
0
பேரவூரணி அருகே வீரியங்கோட்டையில் உள்ள அட்லாண்டிக் இண்டர் நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அசிரியர்கள் அனைவரும் நமது இல்லம் அறக்கட்டளைக்கு வருகை தந்து இன்று (08.08.2016) நமது இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கியும் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியுடன் உறையாடியும் பாட்டுகள் பாடியும்  மற்றும் நடனங்கள் ஆடியும்  நமது இல்லத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் அனைவரின் முன்னிலையில் சிறப்பாக நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அட்லாண்டிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து நமது இல்லத்திற்கு நிழலாகவும் பள்ளியின் ஞாபகங்கள் என்றும் தொடரவும் மரக்கன்றுகள் நட்டுச் சென்றார்கள்.இம்மரக்கன்றுகள் வளர்வதுபோல் அவர்கள் எண்ணங்களும் செயல்களும் என்றென்றும் மென்மேலும் சிறக்க நமது இல்லத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.


இன்று  மாணவச் செல்வங்கள் வருகை தந்ததன் மூலம் நமது இல்லத்தில் உள்ள முதியவர்கள் தங்கள் பேரன்,பேத்திகளை பார்த்தது போல் மகிழ்ச்சியாக உள்ளது  என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.நமது இல்லத்திற்கு வருகை தந்து ஆதரவற்ற முதியவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட மாணவ செல்வங்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் நமது இல்லம் சார்பாக உள்ளம் மகிழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


என்றும் அறப்பணியில்.....
நமது இல்லம் அறக்கட்டளை
(ஆதரவற்றவர்களின் அரவணைப்பு இல்லம்)
புதுக்கோட்டை ரோடு, அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் , அறந்தாங்கி
புதுக்கோட்டை (மாவட்டம்)
Cell:9688880493 ,9047995323,
7402679047 .
தலைமை சேவகர்: M.சந்திரசேகரன்-9965949490.
www.ourhometrust.org
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top