கோதண்டராமர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு சுவாமி அதிகாலை ஊர்வலமாக புறப்பட்டு சென்று மல்லிப்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.