கீரமங்கலத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.

Unknown
0

கீரமங்கலத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.நீண்ட நாள் கோரிக்கை கீரமங்கலத்தை சுற்றி சுமார் 100 கிராமங்கள் உள்ளன. கீரமங்கலம் பகுதியில் விபத்துகள் போன்ற அவசர காலங்களில் ஆம்புலன்சு தேவைக்காக 108 எண்ணை தொடர்பு கொள்ளும் போது கீரமங்கலம் பகுதிக்கு அறந்தாங்கி அல்லது ஆலங்குடி பகுதியில் இருந்தே ஆம்புலன்ஸ் வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. பல நேரங்களில் அந்த ஆம்புலன்சுகள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டால் பின்னர் மணமேல்குடி, பேராவூரணி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் வரவேண்டிய நிலை இருந்தது. அதனால் விபத்திற்குள்ளானவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நிலை இருந்து வந்தது. அதனால் கீரமங்கலத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கீரமங்கலம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கீரமங்கலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து முன்னிலையில் நடந்தது. விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் பேரூராட்சித் தலைவர் தனலெட்சுமி, மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கீரமங்கலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top