தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, ஒரு நகராட்சிக்கு 17ம் தேதி முதற்கட்ட தேர்தல்.

Unknown
0

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சிக்கும், ஒரு நகராட்சிக்கும் தேர்தல் நடக்கும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் வரும் 17, 19ம் தேதி என்று இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த இரண்டு கட்ட தேர்தலுக்கும் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். வரும் 4ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 6ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.


தேர்தல் முடிந்த பின்னர் வரும் 21ம் தேதி காலை 8.30 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முதல் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. நவம்பர் மாதம் 2ம் தேதி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்.

தஞ்சை மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தல் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது. பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 309 வார்டுகளில் உள்ள 166 வாக்குச்சாவடிகளில் 34,678 ஆண் வாக்காளர், 35,999 பெண் வாக்காளர் என்று 70,677 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 408 வார்டுகளில் உள்ள 263 வாக்குச்சாவடிகளில் 70,719 ஆண் வாக்காளர், 71,022 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 1 பேர் என்று 1 லட்சத்து 41 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 285 வார்டுகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் 45,289 ஆண் வாக்காளர், 46,380 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 7 பேர் என்று 91,676 பேர் வாக்களிக்க உள்ளனர்.தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் 477 வார்டுகளில் உள்ள 328 வாக்குச்சாவடிகளில் 88,432 ஆண் வாக்காளர், 92,216 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 14 பேர் என்று 1 லட்சத்து 80 ஆயிரத்து 662 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 327 வார்டுகளில் உள்ள 175 வாக்குச்சாவடிகளில் 39,50 ஆண் வாக்காளர், 38,418 பெண் வாக்காளர் என்று 77,468 பேர் வாக்களிக்கவுள்ளனர். திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் 303 வார்டுகளில் உள்ள 165 வாக்குச்சாவடிகளில் 38,396 ஆண் வாக்காளர், 39,506 பெண் வாக்காளர் என்று 77,902 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 375 வார்டுகளில் உள்ள 222 வாக்குச்சாவடிகளில் 51,532 ஆண் வாக்காளர், 50,462 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 2 பேர் என்று 1லட்சத்து ஒரு ஆயிரத்து 996 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஆக மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தலுக்கு 2 ஆயிரத்து 484 வார்டுகளில் உள்ள ஆயிரத்து 487 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 5 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 24 பேர் என்று மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 123 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் நகராட்சிக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் 51 வார்டுகளில் 91,552 ஆண் வாக்காளர், 97,243 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 4பேர் என்று 1 லட்சத்து 88 ஆயிரத்து 799 பேர் வாக்களிக்க உள்ளனர். கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகளில் 51,848 ஆண் வாக்காளர், 53,862 பெண் வாக்காளர் என்று 1 லட்சத்து 5 ஆயிரத்து 710 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் ஆடுதுறை, அய்யம்பேட்டை, தாராசுரம், மேலதிருப்பூந்துருத்தி, பாபநாசம், சோழபுரம், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர், திருபுவனம், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 15 பேரூராட்சிகளிலும் முதல் கட்டமாக வாக்குப்பதிவு வரும் 17ம் தேதி நடக்கிறது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top