உள்ளாட்சி தேர்தல் 2016: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை.

Unknown
0


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் இன்று (26.10.2016) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்ததாவது, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் 2016 அறிவித்துள்ளது.  அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற காவல் துறையின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னேற்பாடுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 362 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  22 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என கண்டறியப்பட்டுள்ளது.   இந்த வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறை, நுண்ணிய பார்வையாளர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள், வெப் கேமிரா  மூலமாகவும் வாக்குப்பதிவை கண்காணிக்கப்படவுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் பிரசாரத்திற்கு மூன்று வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது 5 நபர்கள் மட்டுமே  தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  வேட்பாளர்கள்  வாக்கு சேகரிக்க காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்யலாம்.  வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வாகனம் அனுமதி கிடையாது.  வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்க செய்யக் கூடாது.  இந்த விதிமுறைகளை காவல் துறையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று  இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top