நம் ஊரில் சிலவருடங்களுக்கு முன்புவரை அடிக்கடி தென்பட்ட சில
பூச்சி வகைகளை இப்போது அதிகம் காண முடியவில்லை .
1 - பட்டு பூச்சி ,சிவப்பு பூச்சி ,வெல்வெட் பூச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சுவாரஸ்யமான ஒரு வகை பூச்சி .சிவப்பு நிறத்தில் மெத்தென்று இருக்கும் .கைகளில் விட்டால் வேகமாக நடக்கும்.மழைகாலங்களில் அதிகம் தென்படும் .நம் ஊரில் குழந்தைகள் இதை இயேசுவின் துப்பல் என்று அழைப்பர் .சென்ற வருடம் ஏழு விளை பற்றில் இரண்டு பூச்சிகள் கண்டேன் .
2 -மின்மினி பூச்சி .ஆங்கிலத்தில் FIREFLY என்று அழைக்கப்படும் .இரவில் ஒளிரும் அற்புத பூச்சி ,இதன் ஒளிரும் தன்மை இன்றும் அதிசயமே .
3 -சில்வண்டு, இது மரத்தில் ஒட்டி கொண்டு அழகாய் ரீங்காரமிடும் .இதன் இசை அற்புதமானது .
4 ) பொன்வண்டு -அழகான பூச்சி ,கண்ணை கவரும் மினுமினுப்பு தோற்றம் உடையது .
இந்த பூச்சிகளை பிடித்து தீ பெட்டியில் வளர்ப்பது சிறுவர்களின் விளையாட்டு .
5 )தட்டாம் பூச்சி , பட்டாம் பூச்சி - அதிக அளவில் காணப்பட்டது ,இதை பிடித்து நூல் கட்டி சிறுவர்கள் விளையாடுவர் .
இப்போது இவை அழிந்துவிட்டன அல்லது குறைந்து விட்டது .என சொல்லலாம்.