பேராவூரணி அருகே உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்.

Unknown
0தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடக்கும் தஞ்சாவூர் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி துவக்க விழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இவ்விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர்.கே.முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டுப் போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகையதீன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.சாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். தஞ்சை மண்டல அளவில் 15 கல்லூரியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த விளையாட்டுத்துறை இயக்குநர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் தஞ்சை மண்டல அளவில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் திருச்சி மண்டலத்தில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் வருகின்ற அக். 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் இறுதி போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர்.கே.முருகானந்தம் செய்தார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top