பேராவூரணி அருகே நடந்த கபடி போட்டியில் பொள்ளாச்சி அணி முதலிடம் பெற்றது.

Unknown
0

பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு தென்றல் கபடிக்குழு சார்பில் 21ம் ஆண்டு சிறுவர் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 52 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற போட்டியில் பொள்ளாச்சி, திருப்பத்தூர், பெருமநாடு, வல்லவன்பட்டினம், ஆதனூர், இடையாத்தி, மேட்டுப்பாளையம், சிவகங்கை, ஊமத்தநாடு உட்பட 24 அணிகள் கலந்து கொண்டன. முதல்பரிசு 10,010 ரூபாயை பொள்ளாச்சி அணியினரும், 2ம் பரிசு 8,008 ரூபாயை வல்லவன்பட்டினம் அணியினரும், மூன்றாம் பரிசு 6,006 ரூபாயை இடையாத்தி அணியினரும், நான்காம் பரிசு ரூ.5005ஐ ஊமத்தநாடு அணியினரும் பெற்றனர். கபடி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top