புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விசலூரில் கிபி 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு.

Unknown
0





புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விசலூரில் கிபி 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு. அன்னவாசல்,நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த விசலூரில் கிபி 10 - ம் நூற்றாண்டை சேர்ந்த 10 - கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதை எடுக்க வருவாய்துறை மற்றும் அருங்காட்சியத்துறையினர் சென்றதால் சிலைகளைஎடுக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் பெரிய குளத்தில் கருவைகள்சூழ்ந்த முற்புதருக்குள் கற்சிற்பங்கள் இருப்பதாகவும் இதை அருங்காட்சிய காப்பாச்சியரிடம் ஒப்படைக்கும் படியும் இலுப்பூர் வட்டாச்சியருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை செய்தார் இதனை அடுத்து விசலூரில் உள்ள சம்பவ இடத்திற்கு நேற்று காலை இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி மற்றும் புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமி ஆகியோர் கொண்ட குழுக்கள் சென்றன மேலும் அங்கிருந்த கிபி 10 - ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிற்பங்களை எடுக்க முயன்றனர் ஆனால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி எங்கள் ஊர் சாமி சிலைகளை எடுக்க கூடாது என எதிர்பு தெறிவித்தனர்

இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு கற்சிற்பங்களை எடுக்கும் பணி தொடங்கியது இதைகான சுற்றுவாட்டார பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டது.

10- சிலைகளின் விபரங்கள் ; 1 - சேஷ்டா தேவி - அமர்ந்த நிலையிலும் 2 - தெட்சிணா மூர்த்தி - அமர்ந்த நிலையிலும் 3 - பிரம்மா - அமர்ந்த நிலையிலும் 4 - நரசிம்மா - அமர்ந்த நிலையிலும் 5 - துவார பாலகர் - அமர்ந்த நிலையிலும் 6 - சாண்டிகேஸ்வர - அமர்ந்த நிலையிலும் 7 - இந்திரன் - அமர்ந்த நிலையிலும் 8 - நந்தி சிலைகள் 3. என 10 - கற்சிற்பங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்டன பின்பு இவை அனைத்தும் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அருங்காட்சியத்திற்கு கொண்டுசென்று மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேற்கண்ட கற்சிற்பங்கள் காணப்படும் கலை நுணுக்கங்களையும் வேலைபாடுகளையும் ஆராயும் போது இவைகள் கிபி - 10 ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் எனவும் இதை அருங்காட்சியத்தில் வைத்து காட்சிபடுத்தினால் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர் மேலும் 10 - கற்சிற்பங்களையும் இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் தலைமையில் போலீசார் செய்துருந்தனர்.

நன்றி : தினத்தந்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top