தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் தஞ்சை கலெக்டர் உத்தரவு
Unknown
January 31, 2017
0
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதே போல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேலமரங்களும் அகற்றப்பட்டன. தனியாருக்கு சொந்தமான இடங்களில் இன்னும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உள்ள இடத்தின் உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்றப்படாவிட்டால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளாட்சித்துறையால் உடனடியாக அகற்றப்படும். அவ்வாறு சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு செலவிடப்படும் செலவுத்தொகையுடன் அபராத தொகையும் சேர்த்து தொடர்புடைய இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.