உளுந்து பயிரில் பூச்சி, நோய் கட்டுப்படுத்துவது எப்படி.

Unknown
0

உளுந்து பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கை: உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளில் தண்டு ஈ, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவை மிக முக்கிய பூச்சிகளாகும். தண்டு ஈ தாக்குதலால் செடிகள் முற்றிலும் காய்ந்து விடும். இதை கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை விதைத்த 7ம் நாள் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வளர்ச்சி பருவத்தின்போது தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் (அல்லது) டைமீத்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் இதில் ஏதாவது ஒரு மருந்தை 2 மிலி.யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
வானிலையில் அசுவினியின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் இதற்கு டைக்குளோர்வாஸ் 2 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தவரைல் மஞ்சள் தேமல் நோய், வாடல் நோய், வேர் அழுகல் நோய், சாம்பல் நோய் முக்கியமானவையாகும். மஞ்சள் தேமல் நொய் தென்பட்டால் பயிரை பிடுங்கி அப்புறப்படுத்துவதே சிறந்த கட்டுப்பாடாகும். வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்கிய செடிகளை பிடுங்கி அகற்றி அந்த இடத்தில் பாவிஸ்டின் 10 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து செடி பிடுங்கிய இடத்தில் கரைசலை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கலாம். சாம்பல் நோய் தென்படும் இடங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகத்தூல் 10 கிராம் மருந்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top