தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

Unknown
0

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகையான பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக உயர் கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கிறது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.

அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரத்யேக இணையதளத்தில் மே 1-ம் தேதி முதல் 31 வரை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை மே 31-ம் தேதிக்குள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 3-ம் தேதி கடைசி நாள் ஆகும். அதன்பின்னர் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை தயார் செய்வதற்கு வசதியாக ரேண்டம் எண் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும். ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top