நாளை மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் விழா.

Unknown
0






உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலின் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த 24ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. கோயில் தலைமை குருக்கள் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், தனபூஜை, கஜபூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜையை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை ப்ரவேசபலி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமமும், மாலை வாஸ்துசாந்தியும் நடைபெற்று வருகிறது. ஏப்.30ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதையடுத்து மே 1ம் தேதி அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top