பேராவூரணி ஒன்றிய ஆணையர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கடுமையான கோடைகாலம் நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தடையை மீறி மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கப்பட்டால், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராவூரணி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்.
April 27, 2017
0
Tags
Share to other apps