பேராவூரணி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் தடகளம், கால்பந்து, கைபந்து, கபடி, இறகுபந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். ஏப்ரல் 30ந் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது. முகாமில் பயிற்சியாளர்கள் முத்துராமலிங்கம், பாஸ்கர், பாரதிதாசன், கண்ணதாசன், சோலை, சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி.
April 24, 2017
0
Tags
Share to other apps