பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்.

Unknown
0

பாடங்களுக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது: பிளஸ்-2 பொதுத் தேர்வு முறையில் மாற்றம் - தேர்வு நேரத்தை குறைக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டம்

பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ போல பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்க ளுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கவும், தேர்வு நேரத்தை 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் பெரிய அளவி லான மாற்றங்கள் நிகழ்ந்து வரு கின்றன. கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச் சந்திரன் ஆகியோர் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி அவர் களின் கருத்துகளையும் யோசனை களையும் கேட்டு வருகின்றனர்.

மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் ரேங்க் பட்டியல் முறை இந்த ஆண்டில் இருந்து கைவிடப் பட்டுள்ளது. அண்மையில் வெளி யிடப்பட்ட பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட வாரியான ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த முடிவை பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு

அடுத்த கட்டமாக, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வாக இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பிளஸ் 1 வகுப்பை கண்டுகொள்வ தில்லை. பெரும்பாலான பள்ளி களில் பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்களே நடத்தப்படுகின்றன.

பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை படிப்பதால் போதிய அடிப்படை பாட அறிவை மாணவர்கள் பெற முடியாமல் போகிறது. இதன் காரணமாக, மிகச் சிறந்த தொழிற்கல்வி கல்லூரி களில் சேர்ந்தாலும்கூட அங்கு பாடங் களை படிக்க மிகவும் சிரமப்படு கின்றனர். பலர் செமஸ்டர் தேர்வு களில் தோல்வி அடைகின்றனர்.

மேல்நிலைக் கல்வியில் அடிப் படை பாட அறிவு இல்லாததால் ஐஐடி, ‘நீட்’ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பிளஸ் 1 பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்களை தயார் படுத்தவும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 வண்ண சீருடைகள்

தமிழகத்தில் 10 ஆண்டுக ளுக்கு மேலாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. எனவே, தற்போதைய கல்விச்சூழ லுக்கு ஏற்ப மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு, மேல்நிலைக் கல்வி பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக வெகுவிரைவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சீருடையும் மாற்றப்பட உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 10-ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 3 விதமான வண்ணங் களில் மாணவ, மாணவிகளின் சீருடைகள் அமைந்திருக்கும். மேலும், வரும் ஆண்டில் இருந்து பள்ளிகளில் யோகா வகுப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வல்லுநர் குழு பரிந்துரை

இந்நிலையில், மூத்த ஆசிரி யர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட வல்லுநர் குழு, பள்ளிக் கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரை களை வழங்கியுள்ளது. அந்த பரிந் துரையின் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் 6 பாடங் களுக்கு மொத்தம் 1,200 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கான மதிப் பெண்ணை 200-லிருந்து 100 ஆக குறைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. (தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்களே வழங்கப்படுகிறது). எனவே, பிளஸ் 2 தேர்வில் மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆக குறையும்.

கேள்வி முறையில் மாற்றம்



மேலும், மாணவர்களை அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வண்ணம் பிளஸ் 2 தேர்வில் கேள்வி முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்தான் பாடப்புத்தகங் களில் இருந்து கேட்கப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்கு குறிப்பிட்ட பாடம் தொடர்பான பொது அறிவுக் கேள்விகளாக, புரிந்துகொள்ளும் திறனை ஆய்வு செய்யும் கேள்விகளாக இருக்கும்.

பாடத்துக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டதைப் போன்று தேர்வு நேரத்தையும் 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக 6 செமஸ்டர் தேர்வுகளின் மதிப் பெண்களையும் சேர்த்து ஒருங் கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்கள். அதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான் றிதழ் வழங்கலாமா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

வல்லுநர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகளை நிறை வேற்றும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு ஓரிரு நாளில் உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top