பேராவூரணியில் முறையாக அரசுப் பேருந்துகள் இயக்காததைக் கண்டித்து மறியல்

Unknown
0

பேராவூரணி அருகே அரசுப் பேருந்துகள் முறையாக இயக்க ப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பேராவூரணி அரசுப் போ க்குவரத்துக் கழகத்திலிருந்து குருவிக்கரம்பை, குறவன்கொ ல்லை, கஞ்சங்காடு, கரம்பக்காடு, செருபாலக்காடு வழியாக தடம் எண். 8, 14 ஆகிய அரசுப் பேருந்து கள் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தினசரி சுமார் 10 முறைகளுக்கு மேல் முழு நேரமும் இந்த பகுதிகளில் இயங்கி வந்த இந்த பேருந்துகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக 4 முறைகள் கூட முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள குருவிக்கரம்பை வரை நடந்து சென்றுதான் பேருந்துகளில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள், கடைகளில் வேலை செய்யும் பெண்கள் உட்பட அனைவரும் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அரசு பேருந்துகள் முறையாக இயங்காததால் இதன் வழியாக இயக்கப்படும் ஒருசில தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கட்டண நிர்ணயம் இல்லாமல் அதிகமாக வசூல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கஞ்சங்காடு, வாவிலான்வயல், பூங்குடிக்காடு, குறவன்கொல்லை, தேனங்காடு, தண்டாமரைக்காடு, சங்கரன்கொல்லை உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை கஞ்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்தால்தான் மறியல் கைவிடப்படும் என பொதுமக்கள் கோரிக்கை வை த்தனர். இந்நிலையில் போக்குவரத்துக் கழக நிர்வாகி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து இனிமேல் முழுமையாக இந்த 2 பேருந்துகளும் இந்த பகுதியில் இயக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.பொதுமக்கள் குற்றச்சாட்டு பேராவூரணி போக்குவரத்துக் கழக கிளை மேலாளராக லெட்சு மணன் என்பவர் பொறுப்பேற்றதில் இருந்து, பேருந்துகள் இயக்கம் முறையாக இயக்கப்படவில்லை எனவும், சிறப்பு பேருந்துகள் என இயக்கி கமிஷன் பார்ப்பதாகவும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களே வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கீரமங்கலம் பகுதி யைச் சேர்ந்த லெனின் பிரபு என்பவர் கூறுகையில்," கடந்த சில தினங்களுக்கு முன் கீரமங்கலம் பகுதிக்கு பேருந்து வரவில்லை என பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பரிடம் கேட்கலாம் என சென்றால், அங்கு பதில் சொல்ல யாருமில்லை. பேராவூரணி டெப்போவுக்கு 04373-232531 என்ற எண்ணுக்கு பலமுறை அழைத்தும் பதில் இல்லை. பின்னர் கும்பகோணம் அலுவலகத்திற்கு 0435-2403726 மற்றும் 1800-41-94287 என்ற டோல்-ப்ரீ நம்பருக்கு அழைத்தும் எந்த பதிலும் இல்லை. பேராவூரணி போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது" என்றார். போக்கு வரத்துக் கழக உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top