பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: ஆன்-லைன் பதிவு தொடங்கியது.

Unknown
0

இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி றறற.யnயேரniஎ.நனர ஆகும். திங்களன்று (மே 1) பதிவு தொடங்கியது.ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும்.சமவாய்ப்பு எண் ஜூன் 20 அன்றும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 அன்றும் வெளியிடப்படுகிறது.அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top