பெருமகளூரில் மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்.

Unknown
0
பேராவூரணியை அடுத்த பெருமகளூர் கடைவீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி பல்வேறு இடங்களில் ஒருசில கடைகளை அப்புறப்படுத்தினாலும் இன்னும் பல்வேறு இடங்களில் கடையை மாற்றுவதற்கு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பெருமகளூர் கடைவீதியில், குடியிருப்பு பகுதியில், மாநில நெடுஞ்சாலை பிரிவில் உள்ள அரசு மதுபானக்கடையால் பொதுமக்கள், பேருந்து பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், கடையை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவர் ஆர்.கலை ச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி.அமுதா, கிளைத் தலைவர் ராமாமிர்தம், செயலாளர் தவமணி, பொருளாளர் செல்வி, துணைத்தலைவர் குப்ப ம்மாள், துணைச் செயலாளர் பானுமதி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கிளைச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், திமுக நிர்வாகிகள் வி.பி.ஜெயச்சந்திரன், மா.சிதம்பரம் கே.சீனிவாசன், வி.ஆர்.ஏ.ஆனந்த், ஜெயப்பிரகாஷ், கோ.சிதம்பரம், ஏ.கே.ராஜேந்திரன், கே.சாமிநாதன் மற்றும் 600 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன், பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன், பட்டுக்கோட்டை கலால் டிஎஸ்பி சேகர், டாஸ்மாக் உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி, காவல்துறை ஆய்வாளர்கள் ஜெனார்த்தன், செந்தில்குமார், தியாகராஜன், ஜெயா மற்றும் வருவாய்த்துறை, கலால்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பெருமகளூர் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை 20 நாள் அவகாசத்தில் மதுக்கடையை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்க ப்பட்டது.முன்னதாக பொதுமக்கள் அமர்வதற்கு சாலையையொட்டி பந்தல் அமைக்க முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மதுபானக்கடையை நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்ற மாதர் சங்கத்தினரை அரண் அமைத்து தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாதர் சங்கத்தினர், பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர்.
நன்றி : தீக்கதிர் 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top