ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செடிகள், இலைதழைகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.

Unknown
0


நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 94 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, 95–வது நாளாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 96–வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இதில் பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், பசுமையான பகுதியாக விளங்கும் நெடுவாசல் பசுமையை இழந்து பாலைவனமாக மாறிவிடும் என்பதை மத்திய, மாநில அரசுக்கு உணர்த்தும் விதமாக செடிகள், இலைதழைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கலந்து கொண்டு பேசுகையில், விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top