பேராவூரணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் எந்த நேரமும் அவுட் ஆப் சர்வீஸ்.

Unknown
0
பேராவூரணியில் எந்நேரமும் அவுட் ஆப் சர்வீஸில் இருக்கும் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களால் பொதுமக்கள் மிகுந்த அவதி க்குள்ளாகி வருகின்றனர்.பேராவூரணி நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை பல வரு டங்களாக இயங்கி வருகிறது. பல்லாயி ரக்கணக்கான பொதுமக்கள், ஓய்வூதி யர்கள், அரசு ஊழியர்கள், மாணவ ர்கள் என பலரும் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இவ்வங்கியில் வாடிக்கையா ளர்கள் 25 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுப்பதாக இருந்தால், வங்கி யில் பணம் தராமல் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயப்ப டுத்துகின்றனர்.

ஆனால் வங்கி அருகில் உள்ள ஏடிஎம் எந்நேரமும் அவுட் ஆப் சர்வீஸில் இயங்குகிறது. அதேபோல் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப்இந்தியா ஏடிஎம்மிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. அப்படியே ஏடிஎம் இயங்கினாலும் சிறிது நேரத்திலேயே பணம் இல்லை என்றே வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கால்கடுக்க நின்று விட்டு, பணம் இல்லாமல் எதிரே உள்ள லெட்சுமி விலாஸ் வங்கி ஏடிஎம்மை தேடி ச்சென்று பணம் எடுக்கும் சூழல் உள்ளது. அரசுடைமை வங்கியும், நாட்டிலேயே பெரிய வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இச்செயல் பொதுமக்களிடையே கடும்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏடிஎம் கார்டுக்கென தனி கட்ட ணம் வசூலிக்கும் வங்கி, ஏடிஎம்களில் பணம் வைப்பதை கண்காணித்து, தேவையான பணத்தை வைக்காதது சரியா என கேள்வி எழுப்பும் பொது மக்கள், ஒவ்வொன்றிற்கும் தனித்தனிகட்டணம் வசூலிக்கும் போது உரிய ஏற்பாடுகளை செய்யாதது சரியா என கேள்வி எழுப்புகின்றனர். இந்நி லையில் புதிய பேருந்து நிலையம் அரு கில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மும் தற்போது அப்பு றப்படுத்தப்பட்டுள்ளது. வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வங்கி கணக்கு புத்தகத்தில், வரவு-செலவு பதிவு செய்யும் இயந்திரமும் பல நேரங்களில் அவுட் ஆப் சர்வீஸில் உள்ளதாக கூறுகின்றனர்.இதுகுறித்து சமூக செயல்பாட்டா ளர் சித்தாதிக்காடு எஸ்.கருப்பையன் கூறுகையில்,” ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை நிர்வாகம் இதுகுறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மொய் தேவை, மருத்துவ தேவைகள், கல்விக்கட்டணம் செலுத்த என அவசர தேவைகளுக்கு ஏடிஎம் சென்றால் பணம் இல்லை என்ற நிலையே உள்ளது. சனி, ஞாயிறு விடு முறை நாட்களில் சொல்லவே தேவை யில்லை. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தனியார் வங்கி ஏடிஎம்களில் எப்போதும் பணம்கிடைக்கிறது. ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் சேவை மோசமாகஉள்ளது. அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் பொதுமக்கள் சார்பில்வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

நன்றி : தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top