வரலாற்றில் இன்று ஆகஸ்டு 20.

Unknown
0
ஆகஸ்டு 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
1000 – ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
1866 – அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
1917 – இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
1948 – “இலங்கை குடியுரிமை சட்டம்” இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1953 – ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
1968 – பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
1975 – நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
2006 – நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்

1847 – அன்றூ கிரீன்வூட், ஆங்கிலேயெத் துடுப்பாளர் (இ. 1889)
1865 – பெர்னாட் டென்கிரேட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1911)
1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)
1910 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (இ. 1961)
1944 – ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (இ. 1991)
1946 – நா. ரா. நாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
1951 – முகம்மது முர்சி, எகிப்திய அரசியல்வாதி, 5வது அரசுத்தலைவர்
1974 – ஏமி ஆடம்சு, அமஎரிக்க நடிகை, பாடகி
1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
1992 – டெமி லோவாடோ, அமெரிக்க நடிகை

இறப்புகள்

984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
1854 – பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மன் மெய்யியல்லாளர் (பி. 1775)
1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையின் நிறுவனர்களில் ஒருவர் (பி. 1829)
1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)
2006 – சி. சிவமகராஜா, ஈழத்து அரசியல்வாதி, பத்திரிகையாளர்
2013 – நரேந்திர டபூக்கர், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1945)
2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top