பேராவூரணி அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அங்காடி கட்டிடம்

Unknown
0
பேராவூரணி ஒன்றியம் பின்னவாசல் ஊராட்சிசித்தாதிக்காடு கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சி துறை சார்பில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சித்தாதிக்காடு கிராமத்தில் அறந்தாங்கி மெயின்ரோட்டில் ஆழுசூசுநுழுளு 2014-15 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பின்னவாசல் ஊராட்சி- சித்தாதிக்காடு பொது விநியோக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கட்டிடத்திலேயே ஒரு பகுதியில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு தமிழக முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவால் 27.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டதாக கல்வெட்டு அமைக்கப்பட் டுள்ளது.ஆனாலும் இன்று வரை சித்தாதிக்காடு 4 ரோடு அருகே சித்தாதிக்காடு அங்காடி, தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குடும்ப அட்டைதாரர்களிடம் அங்காடி வாடகைக்காக ரூ. 3 வீதம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சித்தாதிக்காடு, புதுக்குடியிருப்பு, முனீஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்தில் அங்காடியை திறக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நன்றி : தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top