பேராவூரணி குறுவட்ட விளையாட்டுப் போட்டி நிறைவு விழா.
Unknown
August 07, 2017
0
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், பேராவூரணி குறுவட்ட 50 ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகள், ஜே.ஸி.குமரப்பா பள்ளி ஏற்பாட்டில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது.இரண்டாம் நாள் விளையாட்டு போட்டிக்கு குமரப்பா பள்ளி அறங்காவலர் பொறியாளர் அஸ்வின் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பரிசளிப்பு விழாவில் குமரப்பா பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் பங்கேற்று விழா தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.