டெங்கு காய்ச்சலை தடுக்க கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை.

Unknown
0


சேதுபாவாசத்திரம் ஒன்றிய கிராம பகுதிகளில் பரவிவரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களை தடுக்க கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது;"தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 32 க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. சேதுபாவாசத்திரம் கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு, டைபாய்டு, சிக்குன்குன்யா, வைரஸ் போன்ற காய்ச்சல்கள் வெகுவாக பரவி வருகின்றன.

இதனால் ஒரு சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அருகிலுள்ள பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. காய்ச்சல் எந்த வகை என அறிந்து கொள்ள மட்டும், ரத்த பரிசோதனை செய்து கொள்ள ரூ. 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் மருத்துவ செலவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சுகாதாரக் சீர்கேடுகளால் ஏற்பட கூடிய மர்மக் காய்ச்சல்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4 அல்லது 6 கிராமங்களை மையமாக கொண்டு அரசு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பொதுமக்கள் இன்னல்களை நீக்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மர்மக் காய்ச்சலை தடுக்க முடியும். மேலும் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் தோறும் துப்புரவுப் பணி, டெங்கு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top