சாம்சங் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் அறிமுகம்.

Unknown
0


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் A (2017) பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு கிட்ஸ் மோட், ஸ்மார்ட் வியூ, சாம்சங் ஃபுளோ மற்றும் கேம் லான்ச்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

4ஜி வசதி கொண்ட கேலக்ஸி டேப் A (2017) வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு முழுக்க சுமார் 180 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒருமுறை திரையை சரி செய்யும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சலுகை நவம்பர் 9-ம் தேதிக்குள் புதிய டேப்லெட்டை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.கேலக்ஸி டேப் A (2017) சிறப்பம்சங்கள்:

- 8.0 இன்ச் WXGA, 1280x800 பிக்சல் TFT டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
- 2 ஜிபி ரேம்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4ஜி எல்டிஇ
- வைபை, ப்ளூடூத்
- 5000 எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் கேலக்ஸி டேப் A (2017) விலை இந்தியாவில் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க சாம்சங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாமில் கேலக்ஸி டேப் A 8.0 (2017) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top