நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தாற்காலிகமாக வாபஸ்.

Unknown
0


மத்திய அரசு கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்போவதாகக் கூறி, குத்தகை ஒப்பந்தம் மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கப் போவதாக மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அறிவித்தது இதனால் அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என அவ்வூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி நெடுவாசல் போராட்டக் குழு ஒன்றினை அமைத்தனர் அவர்கள் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் தங்களின் போராட்டத்தினை துவக்கினார். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கருப்புக்கொடி ஏற்றுதல் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டமானது 174 நாட்களைக் கடந்து தொடர்ந்து வந்தது இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான புஷ்பராஜ் அறிவித்தார்.  ஓ.என்.ஜி.சி. நிறுவனமானது எரிவாயு குழாய் மற்றும் கிணறுக்கான பணிகளை மீண்டும் துவக்கினால், தாங்களும் போராட்டத்தினை மீண்டும் துவங்குவோம் என்று புஷ்பராஜ் அறிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top